Sunday, December 17, 2006

உள்ளே சென்று பாருங்களேன்..!

என்னை நானாய்.. உங்களை நீங்களாய்.. செதுக்கிக்கொள்ள தேவைப்படுவது கடப்பாரைகளல்ல. கையடக்கமான சிறு உளிகளே..!

நிட்சயம் ஒரு கலைஞனை திட்டமிட்டு எவரும் உருவாக்கிவிட முடியாது. இயற்கையிலேயே கலை ஆர்வத்தால் உந்தப்படுகின்ற மனித இதயம்தான் ஏதோ ஒரு வகையில் அத்துறை சார்ந்த படைப்புக்களில் ஒன்றை தன் விருப்புக்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டு தன்னை மறந்து அக்கலையில் லயித்து விடுகின்றது. அது அழகியல் கலையாக இருந்தாலும் சரி! எந்தக் கலைஞனுக்கும் இயற்கையான ஒரு உந்துதல் இருந்தேயாகவேண்டும்.


அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் சிற்பக் கலையை நோக்குமிடத்து... கற்சிற்பம், மரச்சிற்பம், சாந்துச்சிற்பம், உலோக வார்ப்புக்கள் போன்றவை நாமறிந்த காலந்தொட்டு வளர்ந்து வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. இவை பெரும்பாலும் இந்து, கிறிஸ்தவ கோவில்களுக்காக உருவாக்கப்பட்டன. ஆரம்பகாலத்தில் இந்திய சிற்பிகளே இங்கு வந்து எம்மவருடன் இணைந்து இவைகளைச் செய்திருக்கிறார்கள். இப்பொழுது எம்மவர்களே தனித்து நின்று இவற்றை செய்கின்றார்கள்.

கோவில் தேர்களில் கோபுரங்களில் காணப்படும் தெய்வச் சிலைகள் புராண இதிகாசக் கதைகளைக் கூறுகின்றன. கற்சிற்பங்களை செய்யும் சிற்பிகள் இப்பொழுது வெகுவாகக் குறைந்துவிட்டார்கள். காரணம் செய்வதற்குரிய மூலப்பொருட்கள் கிடைப்பதில்லை. உலோக வார்ப்புக்களில் தெய்வாம்சமுள்ள சிலைகள் இப்பொழுது வார்க்கப்படுகின்றது. அன்றுபோலவே இன்றும் எவ்வித மாற்றமுமின்றி வார்ககப்பட்டு வருகின்றது. இதனை கலையென்றோ, வளர்ச்சியென்றோ கூறமுடிவதில்லை. இவைகளை (Creative Art) கலைப்படைப்புக்கள் என்றும் கூறமுடியாது.
எதிலும் நவீனத்துவம் நோக்கியே இன்று உலகம் நகர்ந்துகொண்டிருக்கிறது. நாம் இன்று பின்நவீனத்துவ உலகில் நின்றுகொண்டிருக்கிறோம். இலக்கியம் தொட்டு எந்தக் கலையும் இதற்கு விதிவிலக்கல்ல. சிற்பக்கலையும் அவ்வாறேதான். இதனை அப்ஸ்ரக்ற் (Absetract) என்று கூறுவார்கள். அரூபபாணி – சிம்பாலிக்ஸ் எனப்படும் குறியீடுகளை சிற்பம் பிரதிபலிக்கின்றது. ஒரு சிற்பியோ, ஓவியனோ தனது மன எழுச்சியை, அழுத்தத்தை, உள்ளுணர்வை காட்டுவதற்கு நவீன பாணி பெரிதும் பயன்படுகின்றது. மக்கள் அதனை புரிந்துகொள்ளவும், இரசிக்கவும் பழகவேண்டும்.

இன்றைய இளம் சந்ததி நவீனத்துவத்தையே விரும்புகின்றது. ஒரு சிலை வெறுமனே சிலையாக மட்டும் இருந்துவிடக்கூடாது. அது பார்வையாளரை சிந்திக்க வைக்குமானால் அதில் ஒரு சிறப்பு இருக்கின்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்து சிற்பக் கலைஞர் திரு A.V. ஆனந்தன் அவர்களுடைய சிற்பங்களை காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதில் கிளுக்கிய சில படங்களை புளொக்கர் வாசக நெஞசங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

கீழே காட்டப்பட்டுள்ள சிற்பங்களை பார்த்ததும் அவை எந்தெந்த மரங்களினால் செய்யப்பட்டவை என்பதனை உங்களால் ஊகிக்க முடிகிறதா?
































7 comments:

வன்னியன் said...

நல்ல பதிவு.
நல்ல படங்கள்.
அருமையாக இருக்கிறது.

மரம் பற்றி அனுமானிக்க முடியவில்லை.
பொதுவாக மஞ்சமுனா, தேக்கு, முதிரை, பூவரசு இவற்றுளொன்று ஏதோவொன்றுக்காவது பொருந்தும்.
;-)

கானா பிரபா said...

கலீஸ்

அருமை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வானம்பாடி கலீஸ்!
இச் சிலைகள் மிகக் கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன; இவை முதிரை;பாலை;கருங்காலி;வேம்பு மரங்களாக இருக்கும் எனும் அனுமானம். கையிலிருந்தால் மணந்து பார்த்து மரத்தைக் கண்டுபிடிக்க முடியும்; வாணிஸ் பூச்சின் பின் மரத்தை ஊகிக்கச் சிக்கலாக உள்ளது.
சென்னைப் பூம்புகார் கலைப் பொருளங்காடியில் மரபுவழியுடன்;தற்கால கலையம்சமும் கண்டேன். விலைதான் நான் தொடக்கூட முடியாத நிலை.
பதிவிட்டுப் பகிர்ந்தமைக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

"வானம்பாடி" கலீஸ் said...

பின்னூட்டத்திற்கு நன்றி யோகன் அண்ணா!
கடந்த இரண்டு வாரமாக சிக்குன் குனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உடம்பு முறிக்கப்பட்டு தற்போதுதான் ஓரளவு உடல் தேறி வந்துள்ளது. அதனால்தான் உங்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த ஆக்கத்தினை நான் எழுதும்போது உங்களுக்கும் சிற்பமென்றால் பிடிக்கும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. உங்களிடமிருந்து நிட்சயம் எனக்குப் பின்னூட்டம் கிடைக்குமென்பதும் தெரிந்த விடயம்.
நன்றி யோகன் அண்ணா!

"வானம்பாடி" கலீஸ் said...

கானா பிரபா! மற்றும் வன்னியன்!
உங்களிருவருக்கும் என் வணக்கங்கள்! தங்கள் பின்னூட்டம் கண்டேன். நன்றி.
தாங்கள் கூறியுள்ள மரங்கள் சரி.... பிளை.... இருக்கலாம். நீங்கள் இலங்கையர்கள் தானே? முக்கியமான ஒரு மரத்தை விட்டுவிட்டீர்களே?
யோசிக்கவும்.....:))

மலைநாடான் said...

கலீஸ்!
அருமையான படங்களும், பதிவும்.

முதலாவதாக பெண்கள் உரலில் இடிக்கும் சிற்பம் பூவரசு மரம்.

இரண்டாவதாக உள்ள தாயும் சேயும் சிற்பம் மஞ்வண்ணா

முன்றாவது சிற்பம் வேம்பு

பெரியவர் சிற்பம் பனை ஆகிய மரங்களில் செதுக்கப்பட்டிருப்பதாக நினைக்கின்றேன். ஒரு ஊகமும், முயற்சியுந்தான்.

"வானம்பாடி" கலீஸ் said...

மலைநாடானுக்கு வணக்கம்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தாங்கள் கூறியது சரியா பிழையா என்பது விரைவில் அறிவிக்கப்படும். காரணம் மற்றையவர்களும் ஊகிக்கட்டுமே என்ற நப்பாசைதான்...
பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!