Friday, November 17, 2006

வானம்பாடிபற்றி...!

வானம்பாடி இசை பாடும் மேல்நாட்டுப் பறவையாகும். இதன் குரலில் பல ஸ்வரங்கள் உள்ளன. இது பகலிலும் பாடும், இரவிலும் பாடும். ஆனால் நிசப்தமான இரவு வேளையில் மற்ற பறவைகள் தூங்கும்போது இது மட்டும் பாடுவது மிக மிக இனிமையாக இருக்கும். ஆறே ஆறு இஞ்சு நீளமுள்ள பறவையான வானம்பாடியில் பெண் பறவைகள் பாடுவதில்லை. ஒரு தடவைக்கு நான்கைந்து முட்டைகளை போடும். வானம்பாடியை பற்றி க்ரீஸ் நாட்டில் சுவையான கதையொன்றும் உண்டு.

7 comments:

தமிழ்நதி said...

நல்வரவு நண்பரே!

யாழ்ப்பாணத்தின் எந்தப் பகுதியிலிருந்து எழுதுகிறீர்கள்…? அங்கு நிலைமைகள் வெகு மோசமாக இருப்பதாக அறிகிறோம். இந்நிலையிலும் எழுத முடிவதும் வலையில் பதிய முடிவதும் வியப்புக் கலந்த மகிழ்வளிக்கிறது. எத்துயரிலும் வாழ்வில் உயிர் இருப்பதையே இது காட்டுகிறது.

நதி

கானா பிரபா said...

வலைப்பூவுலகில் உங்கள் படைப்பைக் காண்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

"வானம்பாடி" கலீஸ் said...
This comment has been removed by the author.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கலீஸ்,

வணக்கம்!

தமிழில் வலைப்பதிவு தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்! ஏனைய இடுகைகளை வாசித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.

-மதி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலீஸ்!
வாருங்கள்!!! நீங்களும் பாடுங்கள்;வானம் பாடி போல்....இந்த வானம்பாடியை ஆங்கிலத்தில் என்னென அழைப்பர் விபரம் தாருங்கள்.
யோகன் பாரிஸ்

"வானம்பாடி" கலீஸ் said...

வணக்கம் மதி!
சீக்கிரமா வாசியுங்கோ, கெதியில பின்னூட்டம் போடுங்கோ! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றியுங்கோ! அதோட நான் இப்பிடி எழுதுறனெண்டும் கோவிக்காதையுங்கோ!

"வானம்பாடி" கலீஸ் said...

வணக்கம் யோகன்!
வானம்பாடிக்கான ஆங்கிலச் சொல் தேடிக்கொண்டிருக்கிறேன். அதற்குமுன் உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அனுப்பிவையுங்கள்.