Tuesday, November 21, 2006

அப்துல் ரகுமானின்………

“கசல்” அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். அதன் சுதந்திரமும் மென்மையும் நளினமும் நவீனத்துவமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தமிழில் கசல் என்ற பெயரில் ஓரிரு தொகுதிகள் வந்திருந்தாலும், இதுவே தமிழில் முதல் கசல் தொகுதி எனலாம்.

கசல் என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கசல் பெரும்பாலும் காதலையே பாடும். அதிலும் காதலின் சோகத்தைப் பாடும். காதலில் புன்னகைகளை விட கண்ணீர்தானே அதிகம். காதலின் சோகம் என்பது உண்மையில் சோகம் அல்ல, அது ஒரு சுகம்.
மின்மினிகளால் ஒரு கடிதம் என்ற அப்துல் ரகுமானின் இக்கவிதைத் தொகுதியிலும் சோகக் கவிதைகளையே அதிகம் காணலாம். அதில் எனக்குப் பிடித்த சில வரிகளையும் உங்களுடன் பகிர விளைகின்றேன்…!


இறைவா!
நம் சங்கமத்திற்காகத்தான்
பெண்ணிடம்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன்

நான் பிறப்பதற்கு முன்
இருந்த இடத்தை
நீ ஞாபகப்படுத்துகிறாய்

ஒவ்வொரு பூவும்
உன் காதல் கடிதம்
இந்தக் கவிதைகள்
நீ செய்த காயங்களிலிருந்து
வடியும் இரத்தம்

வா, மறதியின் இருட்டில்
ரகசியமாய் சந்திப்போம்
உன் கண்களுக்கு அஞ்சி

என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்மறைக்கிறேன்

எல்லாப் பூக்களிலும்
உன் வாசம்
என் கனவு
உன் முன் ஏந்திய
பிச்சைப் பாத்திரம்

உன் கண்களால்தான்
நான் முதன்முதலாக
என்னைப் பார்த்தேன்

எனக்குத் தெரியும்
உன்னைக் காதலிப்பதென்பது
என்னைச் சிலுவையில்
அறைந்துகொள்வதாகும்

ஞாபகங்கள்
உனக்கு ஒற்றடை
எனக்கு வீடு

என்மேல்
உன் முகவரியை எழுதினேன்
அதனால் இறந்த கடிதம்
ஆகிவிட்டேன்




3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலீஸ்!
குறை விளங்கக் கூடாது. எனக்கும் புதுக் கவிதைக்கு முள்ள தொடர்வை அறிய ஆவலா?,
என் ஆக்கத்தை "மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்" படிக்கவு
ம்.
சிலருக்கு பிட்டு,இடியப்பம்;தோசை பிடிக்கும்;எனக்கு சோறு பழசானால் பிடிக்கும்.
அத்துடன் நல்ல அரைச்ச விளை மீன் குழம்பிருந்தால்.
யோகன் பாரிஸ்

"வானம்பாடி" கலீஸ் said...
This comment has been removed by the author.